பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவகம்   

 

 


 
 
 
  
  
  
 
     
         



மரக்கறிகள், பழங்கள், வேர் மற்றும் கிழங்குப் பயிர்கள், மலர்ச்செய்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பத்தை விருத்திசெய்யும் பொறுப்பு பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயிர் வர்க் ௧ங்௧ள், புதிய பெருக்கும் முறைகள், அறுவடைக்குப் பின்னான, உணவுப் பதனீட்டு முறைகள் என்பனவற்றை விருத்திசெய்தல், பாதுகாக்கப்பட்ட வளர்ப்பினை பயன்படுத்துவதை விருத்திசெய்தல், இரசாயனப் பாவனையைக் குறைத்து சிறந்த தாவர ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துதல் என்பனவற்றின் மீதே ஆராய்ச்சித் திட்டம் கவனம் செலுத்துகின்றது.

நோக்கு

தேசத்தின் சுபீட்சத்திற்காக பூங்கனியியல் பயிர்களை அபிவிருத்தி செய்வதனூடாக மேன்மையடைதல்.

நோக்கம்

விவசாயிகள், ஏனைய பங்காளிகள் ஆகியோர்களின் பொருளாதார, சமூக அபிவிருத்தியினை உறுதிப்படுத்துவதற்கு பூங்கனியியல் பயிர்களுக்கான நிலையான, உற்பத்தித்திறனுள்ள தொழில்நுட்பங்களை ஆராய்ந்து விருத்திசெய்வதற்கான தேசிய நிலையமாக தொழிற்படுதல்.

பொறுப்பு

இயற்கை வளங்களை நிலையாகப் பயன்படுத்தவதனை உறுதிப்படுத்தும் அதேவேளை, உற்பத்தித்திறனை அதிகரித்தல், தரத்தினை மேம்படுத்துதல், அறுவடைக்குப் பின்னான இழப்புக்களைக் குறைத்தல். பழங்கள், மரக்கறிகள், வேர் மற்றும் கிழங்குகள் அலங்காரப் பயிர்கள் போன்ற அதிகாரமளிக்கப்பட்ட பூங்கனியியல் பயிர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு பெறுமானம் சேர்த்தல் என்பனவற்றை மேற்கொள்ளும் இலாபகரமான, சூழலுடன் ஒத்துப்போகக்கூடிய நிலையான தொழில்நுட்பங்களை உருவாக்கி பரப்புவதே HORDI இன் நோக்கமாகும்.

நோக்கங்கள்

  • பழங்கள், மரக்கறிகள், வேர்மற்றும் கிழங்குப் பயிர்கள் ஆகியவற்றின் உயர் தரமுடைய அதிகவிளைச்சல் தரக்கூடிய வர்க்கங்களை விருத்திசெய்வதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு உயிரியல் பல்வகைத் தன்மையைப் பயன்படுத்துதல்
  • அடிப்படை பிரயோகிக்கப்பட்ட, இசைவான ஆராய்ச்சியினூடாக நிலையான, உற்பத்தித் திறனுடைய பூங்கனியியலை விருத்திசெய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல்
  • அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பம், விவசாயப் பதனீடு, உற்பத்திப்பொருளை விருத்திசெய்தல், பெறுமதி சேர்த்தல், பூங்கனியியல் உற்பத்திப் பொருட்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் தொடர்பான ஆற்றல்களை விருத்திசெய்தல்
  • ஆராய்ச்சி, விரிவாக்கம், விவசாயிகளின் தொடர்புகள் என்பனவற்றை வலுப்படுத்துவதற்காக விவசாயிகள் பங்குபற்றும் அணுகுமுறைகளினூடாக பண்ணையிடத்திலான ஆராய்ச்சியினை மேற்கொள்ளுதம்
  • வளங்களைப் பகிர்ந்துகொள்ளவும் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும். பல்கலைக்கழகங்கள், அரச, தனியார்த்துறை நிறுவனங்கள் என்பனவற்றுடனான ஒத்துழைப்பு ஆராய்ச்சியினை வலுப்படுத்துதல்

ஆய்வுத் தலைப்புக்கள்

  • பழங்கள், மரக்கறிகள், வேர் மற்றும் கிழங்குப் பயிர்களின் உயர்தரமுடைய அதிக விளைச்சல் தரக்கூடிய வர்க்கங்களை வளர்த்தல்
  • பயிர் நடுகை, கத்தரிக்கும் பயிற்சி போன்றன உள்ளிட்ட பயிர் முகாமைத்துவம்
  • நடுகைப் பொருட்களை பாரம்பரிய,  துரிதமாகப் பெருக்குவதற்கான தொழில்நுட்பம்
  • சூழலுடன் ஒத்துப்போகக் கூடிய, பாதுகாப்பான பொருளாதார ரீதியாக சாத்தியமான பீடை முகாமைத்துவ தொழில்நுட்பங்கள்
  • போஷாக்கு முகாமைத்துவத்தினூடாக மண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்
  • நீரியல், பொலித்தீன் கூடாரங்களில் வளர்ப்பதற்கான தொழில்நுட்பம்
  • சேதன மரக்கறிகள், பழங்களை உற்பத்திசெய்வதற்கான தொழில்நுட்பம்
  • அறுவடைக்குப் பின்னரான இழப்புக்களைக் குறைத்தல், விவசாயப் பதனிடல், உணவு உற்பத்திப் பொருள் விருத்தி என்பவற்றுக்கான தொழில்நுட்பம்

வழங்கப்படுகின்ற சேவைகள்

  • பூங்கனியியல் தொழில்முயற்சிகளைத் திட்டமிடல், அபிவிருத்திசெய்தல் தொடர்பான ஆலோசனை
  • மண், தாவரம், பசளை, நீர் ஆகியவற்றின் பகுப்பாய்வு சேவைகள்
  • பீடை, நோய்களைக் கண்டறியும் சேவைகள்
  • நிலத்தைப் பயன்படுத்தும் முறைகள், மண், நீரினைப் பாதுகாத்தல் தொடர்பான ஆலோசனை
  • அறுவடைக்குப் பின்னரான இழப்புக்களைக் குறைத்தல், விவசாயப் பதனிடல், உணவு உற்பத்திப் பொருட்களை விருத்திசெய்தல் ஆகிய முறைகள் தொடர்பான ஆலோசனை
  • தேசிய, சர்வதேச ஆராய்ச்சி, கல்வி (பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பண்ணைப் பாடசாலைகள்) அமைப்புக்களின் ஒத்துழைப்பினூடாக பூங்கனியியலில் மனித வளத்தினை விருத்தி செய்தல்

HORDI இன் வரலாறு

விவசாயத் திணைக்களம் 1912 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. பிரதான பெருந்தோட்டப்பயிர்களான தேயிலை. இரப்பர், தென்னை பொருளாதார மற்றும் அலங்கார முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய தாவரங்கள் என்பனவற்றை நடுகைசெய்வதற்கான விஞ்ஞான தகவல்களை வழங்கும் விவசாயத் திணைக்களத்தின் முக்கியமான பிரிவுகளில் ஆராய்ச்சிப் பிரிவும் ஒன்றாகும்.

தேயிலை, இரப்பர், தென்னை ஆகியவற்றுக்குத் தனியாக மூன்று நிறுவகங்கள் தாபிக்கப்பட்டு அதன் பின்னர் விவசாயத் திணைக்களத்திலுள்ள ஆராய்ச்சிப் பிரிவு உழவர் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவகத்தையும் நிறுவியது.

மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவகத்தின் புதிய ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல்லை கௌரவ எஸ். டபிள்யு, ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்கள் 1958 ஜூன் 21ஆந் திகதி கண்ணோறுவையில் நாட்டிவைத்தார். முன்னாள் சிலோன் பிரதம மந்திரியான கௌரவ டட்லி சேனாநாயக்க அவர்கள் உத்தியோகபூர்வமாக 1967, ஆகஸ்ட் 6ஆந் திகதி நிறுவகத்தை உத்தியோக பூர்வமாக திறந்துவைத்தார். நிறுவகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிருவாக தலைமையத்துக்குப் புறம்பாக விவசாயத் தாவரவியல், விவசாய இரசாயனம், தாவரநோயியல்,பூச்சியியல்,பூங்கனியியல் உணவுத் தொழில்நுட்பம், சிறு தோட்டப் பயிர்௧ள் புகையிலை, மண் பாதுகாப்பு, புள்ளிவிபரவியல்  என்பனவற்றுக்கான ஆராய்ச்சிப் பிரிவுகளும் காணப்பட்டன.

விவசாயத் திணைக்களத்தை மீளக் கட்டமைக்கும் நோக்குடன் பூங்கனியியல், வேளாண்மை, வயற் பயிர்கள் என்பன தொடர்பான ஆராய்ச்சி, அபிவிருத்திச் செயற்பாடுகளை நடாத்துவதற்காக முன்று தேசிய நிறுவகங்கள் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. பூங்கனியியல் தொடர்பான பயனுள்ள. விரிவான ஆராய்ச்சி அபிவிருத்திப் பணியினை மேற்கொள்வதற்காக கண்ணோறுவயிலுள்ள மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவகம் பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவகமாக பெயர் மாற்றப்பட்டது.

 
 
© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with
Last Modified on - 03/02/2010
Hits on this page - 16745