எங்களைப் பற்றி 

 

 


 
 
 
  
  
  


பயிர்களைப் பரந்தளவில் வளர்ப்பதற்குப் பொருத்தமான பல் சூழல்கள் எங்கள் நாட்டில் உள்ளன.
94 வருடங்களுக்கு மேலாக விவசாயத் திணைக்களம் தொழிற்படுகின்றது.  விவசாய காலத்துடன் தொடர்புடைய மாற்றங்களுடன் முன்னேறிச் செல்வதற்கு விவசாயிகளுக்கு உதவுகின்றது. பின்னர், திறந்த பொருளாதாரம், பொருளாதார செயற்பாடுகளிலும் சுற்றாடல் பிரச்சினைகளிலும் தனியார்த் துறையினரது தொடர்பு என்பவற்றினால் ஏற்படும் மாற்றங்களையும் விவசாயத் திணைக்களம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

சாத்தியமான சர்வதேச உணவுப் பற்றாக்குறை பற்றிய அக்கறை, புதிய சந்தை வலுக்களின் தோற்றம் என்பன எதிர்காலத்திற்குப் பயனுள்ள புதியவைகளை விருத்திசெய்வதற்கு விவசாயத் திணைக்களத்தைத் தூண்டியுள்ளன. உணவைப் பாதுகாப்பதில் நாம் வெற்றிபெற வேண்டுமானால் மாறிவரும் தேசிய, சர்வதேச முன்னுரிமைகளுடன் எங்களுடைய விவசாயம் மாறவேண்டியுள்ளது.

சுற்றாடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் பிரதான உணவுப் பயிர்களில் தன்னிறைவை அடைந்துகொள்வதற்காக புதிய வர்க்கங்களை வளர்த்தல், பயிர் பாதுகாப்பு முறைகளை விருத்திசெய்தல், உற்பத்தி முறைகளை நிலைபெறச்செய்தல் என்பன விவசாயத் திணைக்களத்தின் நோக்கங்களாகும். இந்நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக, சொட்டு நீர்ப்பாசனம், பாதுகாக்கப்பட்ட சுற்றாடல்களின் (தாவர வீடுகள்) கீழ் மேற்கொள்ளப்படும் பயிர் உற்பத்தி, உயிரியல்தொழில்நுட்ப முறைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் யாவும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தகத்தை அதிகரிப்பதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது வெளிச் சக்திகள் செலுத்துகின்ற செல்வாக்குகள் பலமடைய முடியும். உற்பத்தியாளர்களின் விளைச்சலையும் இலாபத்தையும் அதிகரிப்பதற்கான புதிய வழிகளை அவர்களுக்குக் காட்டி அவர்களைப் பாதுகாக்கவேண்டிய தேவையை இது விவசாயத் திணைக்களத்திற்கு உணர்த்தியுள்ளது. இதேவேளை, எங்களது உற்பத்தியாளர்களை சர்வதேச சந்தைகளில் நுழைவதற்கான புதிய வாய்ப்புக்களையும் சுதந்திர வர்த்தகம் திறந்துவைத்துள்ளது. சர்வதேச சந்தைகளுக்கு தரமான உற்பத்திப்பொருட்களை அனுப்புவதற்கு தேவையான புதிய வர்க்கங்கள், புதிய முறைகள், புதிய அறுவடைக்குப் பின்னான தொழில்நுட்பம் ஆகிய பொருத்தமான உற்பத்தித் தொழில்நுட்பத்தை விருத்திசெய்யவேண்டியுள்ளது. புதிய சந்தைத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளத் தேவையான அணுகுமுறையுள்ள பண்ணைத் துறையில் முழுமையானதோர் புதிய கைத்தொழிலை இது திறந்துள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் ஆராய்ச்சித் துறை பணியாற்றவேண்டிய சூழல் இதுவாகும். ஆராய்ச்சித் துறையினது பணியின் குறுக்குப் பகுதியொன்று அளவுக்கதிகமான விபரங்களை ஆழமாக ஆராயாமல் இவ்வாவணத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. எங்களது மக்களுக்கு உணவுப் பாதுகாப்பையும் நல்ல தரமான வாழ்க்கையையும் கொண்டுவருவதற்கான சவால்களை சந்திப்பதற்கு விவசாயத் திணைக்களம் எவ்வாறு முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பது இதில் அதிகமாக விளக்கப்பட்டுள்ளது.

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with
Last Modified on - 06/01/2009
Hits on this page - 13419