www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம் புதிய வர்க்கங்கள்
PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதிய வர்க்கங்ளை அறிமுகப்படுத்தல்


அறிமுகம்/ குழு/ அறிமுகப்படுத்தப்பட்ட வர்க்கங்கள்/ படிவங்கள்/செய்திகள், சம்பவங்கள்

இலங்கையில் கடந்த 5 தசாப்தங்களில் முக்கியமான பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அடைவிற்கு முக்கிய காரணம் பயிர் மேம்படுத்தல் செயற்திட்டமாகும். இந்நாட்டின் பயிர் வர்க்கங்களின் அபிவிருத்தியில் விவசாயத் திணைக்களம் முக்கிய பங்காளியாகும்.

நல்ல பொருத்தமான புதிய வர்க்கங்ளை அறிமுகப்படுத்துவதற்காக விவசாயத் திணைக்களத்தில் தரநியதிகளும் சமச்சீரான பரிசோனைகளும் காணப்படுகின்றது. விவசாயத் திணைக்களத்தின் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையால் மேற்கொள்ளப்படும் DUS பரிசோதனையானது வர்க்க அறிமுகப்படுத்தலுக்கு தேவையான விதிகளை வழங்குகின்றது.

விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் புதிய வர்க்கங்களை அறிமுகப்படுத்தும் குழுவின் தலைவராகும். இவர் இந்த குழுவிற்கு ஓர் காரியதரிசியை நியமிப்பார். இதன் அங்கத்தவர் குழு பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படும். இதில்  விவசாயத் திணைக்களத்தின் ஆராய்ச்சி, விரிவாக்கலும் பயிற்சியும், விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை விதை நடுகைப் பொருள், தாவரத் தடுப்புக்காப்பு சேவை, சமூக பொருளியல் பிரிவு என்பவற்றின்  பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், மூத்த அதிகாரிகள் அடங்குவர்.

இதனை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அது தொடர்பான சகல தகவல்களையும் முன்மொழிவார். இதனை தலைவரும் அங்கத்தவர்களும் ஆலோசனை செய்து இறுதியில் தலைவரால் இவ்வர்க்கம் சிபாரிசு செய்யப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.


 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1953161

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.