www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம் சைபர் விரிவாக்கல்
PDF அச்சிடுக மின்னஞ்சல்

சைபர் விரிவாக்கல்



Cyber_banner

கிராமிய விவசாய தகவல் நிலையத்தை தாபிக்கும் கருத்திட்டம்
விவசாய திணைக்களத்தில் சிபாரிசு செய்துள்ள விவசாய தொழில்நுட்ப தகவல்களை வினைத்திறமையாக விவசாய மக்களிடம் வழங்கி அவர்களின் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக தேசிய விவசாய தகவல் வலையமைப்பை (National Agriculture Information Network) தாபிக்கும் கருத்திட்டத்தின் கீழ் கிராமிய விவசாய தகவல் நிலையம் (Cyber Extension on units/Rural know edge centers) விவசாயத் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக் கருத்திட்டம் ஆரம்பிக்கும் போது சகல விவசாய ஆலோசனை அலுவலகங்களில் தொலைபேசி மற்றும் இணையத்தள வசதி இல்லாதபடியால் பயிர்ச் செய்கை தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இருவட்டுகள் (IMM CD Roms (Inter active Multimedia CD) தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. குறித்த இருவட்டுகள் தயாரிக்கும் பணியில் விவசாயத்திணைக்களத்தில் விரிவாக்கப் பிரிவின் ஒலி, ஒளி நிலையம் ஈடுபட்டுள்ளது. தற்போது குறித்த IMM CD 44 I சம்பந்தப்பட்ட விவசாய ஆராய்ச்சி அலுவலர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்படுகின்றது.

முன்னோடி கருத்திட்டம்
முன்னோடி கருத்திட்டத்தின் கீழ் இலங்கையில் சகல மாவட்டங்களும் உள்ளடங்கும் வண்ணம் நாட்டின் 53 கமநல கேந்திரங்களை அடிப்படையாகக்கொண்டு கிராமிய விவசாய தகவல் நிலையம் தாபிக்கப்பட்டதுடன் (2004 ஆம் ஆண்டில் 25 கிராமிய விவசாய தகவல் நிலையங்களும் 2005 இல் 20 ம், 2007 இல் 8 ம்) அதன் போது ஒரு நிலையத்திற்காக கணினி உபகரண சோடியினை (கணினி, ஸ்கானர் இயந்திரம், பிரிண்டர், டிஜிட்டல் கமரா, வெப் கமரா) ஆகியவற்றுடன் தொலைபேசி வசதிகள் மற்றும் இணையத்தள வசதிகள் வழங்கக்கூடியதான சயிபர் அலகுகள் ஆகியவற்றுக்கான வசதி வழங்கப்பட்டது. கருத்திட்டம் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண விவசாய திணைக்களங்களில் விவசாய ஆலோசகர்கள் ஆகியோரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான நிதி பங்களிப்பு அரசாங்க விவசாய கொள்கைகள் ஆராய்ச்சி சபை கருத்திட்டம் (OARP) மற்றும் விவசாயத்திணைக்களத்தின் அப்போது நடைபெற்ற தானியகளஞ்சிய நிகழ்ச்சித்திட்டம் ஊடாக வழங்கப்பட்டது.

தெயட்ட கிருள 2011 தேசிய கண்காட்சி
தெயட்ட கிருள 2011 தேசிய கண்காட்சிக்கு சமமாக நடைமுறைப்படுத்திய மொணராகல மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறித்த மாவட்டத்தின் சகல விவசாய ஆலோசகர் அலுவலகங்களுக்கு கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் அவ்வலுவலகங்களை கிராமிய விவசாய தகவல் நிலையங்களாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி முன்னோடி கருத்திட்டத்தில் இது வரை பெற்றுள்ள அனுபவங்களின் படி இலங்கையில் சகல விவசாய ஆலோசகர் அலுவலகங்களையும் தேசிய விவசாய தகவல் வலைபின்னலுடன் இணைப்பதற்கான கருத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1864233

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.