www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம்
புதிய பணிப்பாளர் நாயகத்தின் நியமனம்

dg_mr_sriyapalaபுதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை விவசாய சேவையில் முதலாம் வகுப்பைச் சேர்ந்த திரு. கே.ஜி. சிரியாபால அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை ஏற்பதற்கு முன்னர் அவர் விரிவாக்கல் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளராகவும் விவசாய சேவையின் முதலாவது மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றினார். இவர் 1980 ஆம் ஆண்டில் பாட விதான விஷேடத்துவராக மகாஇலுப்பள்ளமயிலுள்ள சேவைக்கால பயிற்சி நிலையத்தில் முதல் நியமனத்தைப் பெற்றார் அங்கு பயிர்-நீர் முகாமைத்துவம் தொடர்பான விஷேட உத்தியோகத்தராக தொழிற்பட்டு இது தொடர்பான தொழில்நுட்ப அறிவை நாடு பூராவும் உள்ள விவசாய அதிகாரிகளுக்கு வழங்கினார்.
1986 ஆம் ஆண்டு இந்த நிலையத்தின் தலைமைப் பதவியான உதவி விவசாய பணிப்பாளராக நியமனம் பெற்று இன் நிறுவனத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறுபட்ட தொழில்நுட்ப பயிற்சி முறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்கு மேலதிகமாக 1989ம் ஆண்டு. பிலிப்பைன்ஸ்யில் உள்ள லொஸ் பானோஸ் அரச பல்கலைக்கழகத்தில் பயிர் விஞ்ஞானத்தில் 2 ½ வருட விஞ்ஞான முதுமானிப் பட்டத்தைப் பெற்றார். இதன் பின்னர் தம்புள்ள தொகுதிக்கு பொறுப்பான உதவி விவசாய பணிப்பாளராகவும் கண்டிக்கான பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) ஆகவும் கடமையாற்றினார். 1995 ஆம் ஆண்டில் தேசிய மட்ட பயிற்சி நிலையமான கன்னொறுவையிலுள்ள சேவைக்கால பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளரான உதவி விவசாய பணிப்பாளராக நியமனம் பெற்றார். அவர் அங்கு வேலை செய்யும் போது பல விஷேட பட்டரைகள், உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகள், மாநாடுகளை முன்னின்று ஒழுங்கு படுத்தினார். இதன் பின்னர் 2002 ஆண்டிலிருந்து 2011 வரை குண்டசாலை விவசாயப் பாடசாலையில் அதிபராக கடமையாற்றி 1500 இற்கு மேற்பட்ட டிப்ளோமா பட்டதாரிகளை நாட்டிற்கு பெற்றுத்தர தலைமைத்துவம் வகித்தார். இக்காலப்பகுதியில் விவசாய பாடசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக ரூபாய் 9 மில்லியனுக்கு அதிகமான பணத்தை செலவிட்டார். 2011 ஆம் ஆண்டில் விரிவாக்கல் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளராகவும் 2012 ஆம் ஆண்டில் முதலாவது மேலதிக விவசாய பணிப்பாளர் நாயகம் (விவசாய சேவைகள்) ஆகவும் நியமனம் பெற்றார்.
எதிர்காலத்தில் விவசாய விரிவாக்கல் சேவையை புதிய ஒர் நுழைவாயிலுடன் வினைத்திறனாதாக நடைமுறைப்படுத்தவும், தேசிய விதைத் தேவையை பூர்த்திசெய்வதற்காக பண்ணைப் பிரிவை அபிவிருத்தி செய்யவும், ஆராய்ச்சிப்பிரிவை மேம்படுத்தி புதிய வர்க்கங்ளை உற்பத்தி செய்யவும், புதிய ஆராய்ச்சி முறைகளை அறிமுகப்படுத்தவும், உத்தியோகத்தர் ஊழியர்களிடமிருந்து தரமான சேவையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும், விவசாய திணைக்களத்தின் சட்டம், ஒழுங்குகளை வினைத்திறனாகவும் ஒழுங்குமுறையிலும் செயற்படுத்தவும், ஒருங்கினைந்த வழிமுறை ஒன்றினூடாக விவசாய அபிவிருத்தியையும் புதிய நூற்றாண்டிற்கு       பொ௫த்தமான தொழில்நுட்ப முறைகளையும் அறிமுகப்படுத்தவும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1860342

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.