| மரக்கறி பயிர்ச்செய்யும் துரிதமான நிகழ்ச்சித்திட்டம் |
|
விவசாய அமைச்சின் தலைமைத்துவத்தில் விவசாய திணைக்களம், மாகாண விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் தெரிவு செய்யப்பட்ட சில மாவட்டங்களில் துரிதமாக மரக்கறி பயிர்ச் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் விவசாய அமைச்சர் கௌரவ மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமைத்துவத்தில் 2011 சனவரி மாதம் 29 ஆம் திகதி மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சித்திட்டம், மரக்கறி செய்கை தொடர்பாக அதிக சாத்தியமுள்ள கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிப்பதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் படி தற்போது ஸ்தீரமாக மரக்கறி பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலதிகமாக சிறிய அளவிலான விவசாயிகளின் உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக தேசிய மரக்கறி உற்பத்தியை அதிகரித்தல் பிரதான நோக்கமாகும்.
விவசாய திணைக்களத்தின் நடமாடும் வண்டிகளின் மூலம் மக்களை அறிவுறுத்தல், சலுகை விலையில் விதைகள் மற்றும் நடுகை பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் லக்பொஹொர கம்பனி மூலம் பசளை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக இலங்கை ஹதபிம அதிகார சபையின் பணிகள் நடைமுறைப்படும் பிரதேசங்களில் மரக்கறி உற்பத்தியை அதிகரிப்பதற்காக விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் ஆகியவற்றை சலுகை விலையில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமும் மேற்படி நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும். |
© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.