www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம் ASDA கருத்தரங்கு
PDF அச்சிடுக மின்னஞ்சல்
ASDA_bannereng

விவசாயத்திணைக்களத்தின் வருடாந்த கருத்தரங்கு A S D A என்பது, விவசாயத்திணைக்களத்தின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை வருடாந்தம் வெளியிடப்பட்டு அவை தொடர்பாக கலந்துரையாடலுக்கும் உரையாடலுக்கும் உட்படுத்தும் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். இதன் போது பல்வேறு விடயங்களின் ஊடாக அதாவது ஆராய்ச்சி, விரிவாக்கம், பயிற்சி, விதை மற்றும் நடுகை பொருட்கள். விதை அத்தாட்ச்சிப்படுத்தல், தாவரப்பாதுகாப்பு அத்துடன் தடைக்காப்பு ஆகியவற்றின் கீழ் பல்வேறு ஆராய்ச்சி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.

குறித்த கருத்தரங்கு கன்னோருவ சேவை பதிப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் தாவர கரு வள நிலையத்தில் ஒரே முறையில் நடாத்தப்படும் தொழில்நுட்ப அமர்வுகள் 2 ஐ கொண்டிருப்பதுடன் ஒரு அமர்வில் 45 ஆராய்ச்சி பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படும். ஒரு பத்திரத்திற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும். சகல ஆராய்ச்சி பத்திரங்கள் உள்ளடக்கிய வெளியீடொன்று வெளியிடப்படும். குறித்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சகல ஆராய்ச்சி பத்திரங்களின் பொருட்டும் பணப்பரிசு வழங்கப்படும். அத்துடன் இவ்வாண்டில் சிறந்த விஞ்ஞானிக்கும் ஆண்டில் வளர்ந்துவரும் விஞ்ஞானிக்கும் ஆண்டில் விவசாய அபிவிருத்தியின் பொருட்டு விசேடமான பணிகளை ஆற்றிய 3 பேருக்கும் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இக்கருத்தரங்கில் அடிப்படை நோக்கங்கள்
  • விவசாயத்திணைக்களத்தின் அலுவலர்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்காக உரையாடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் ஏனைய நிறுவனங்களின் விவசாய விஞ்ஞானிகளுடன் அறிவையும் அனுபவங்களையும் பரிமாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தல்.
  • விவசாயத்திணைக்களத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி பணிகள் ஆகியவற்றுக்காக பிராசாரத்தை வழங்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் மக்களையும் அறிவுறுத்தல்.

ASDA 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000




 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1858203

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.