www.agridept.gov.lk

YOU ARE HERE: முன் பக்கம் எம்மைப் பற்றி
PDF அச்சிடுக மின்னஞ்சல்

எம்மைப் பற்றி


| எம்மைப் பற்றி | அத்தியட்சகர்கள் | நிறுவன அமைப்பு |


 

aboutusவிவசாயத் திணைக்களமானது விவசாய அமைச்சின் கீழ் இயங்குகின்றது. இது அதிகளவு விவசாய ஆராய்ச்சியாளர்களையும் நாட்டின் சகல காலநிலை வலயங்ளையும் உள்ளடக்கும் நிறுவன வலையமைப்பையும் கொண்ட ஓர் பெரிய அரச திணைக்களமாகும்.

விவசாயத் திணைக்களத்தின் முக்கிய நோக்கம் உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறன், உற்பத்தி என்பவற்றை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம், வருமானம் என்பவற்றை அதிகரிப்பதும், நுகர்வோனுக்கு நியாயமான விலையில் உணவை பெற்றுக் கொடுப்பதுமாகும். விவசாயத் திணைக்களத்தின் முக்கிய தொழிற்பாடுகள் ஆராய்ச்சி, விரிவாக்கல், விதை நடுகைப்பொருள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளான தாவரத் தடுப்புக்காப்பு, மண் பாதுகாப்பு, கிருமிநாசினி கட்டுப்பாடு என்பவையாகும்.

விவசாய திணைக்களத்தின் முகாமைத்துவ கட்டமைப்பில் பிராதானமாக மூன்று பிரிவுகள் காணப்படுகின்றது. அவையாவன விவசாய ஆராய்ச்சி அபிவிருத்திப் பிரிவு, விவசாயச்சேவைப் பிரிவு,நிருவாகப் பிரிவு என்பவையாகும். விவசாய ஆராய்ச்சி அபிவிருத்திப் பிரிவின் கீழ் நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம், வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி  ஆராய்ச்சி அபிவிருத்தி ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம், பழப்பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் அடங்கும். விதை அத்தாட்சிப்படுத்தல் பயிர் பாதுகாப்பு நிலையம், விதை நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையம், விரிவாக்கல் பயிற்சி நிலையம், சமூக பொருளியல் திட்டமிடல் நிலையம், இயற்கை மூலவள முகாமைத்துவ நிலையம்,முன்னேற்ற கண்காணிப்பு மதிப்பீட்டு அலகு என்பவற்றுடன் நிருவாகப் பிரிவின் கீழ் பொறியியியல், நிருவாகம்,நிதிப் பிரிவு என்பன உள்ளடக்கப்படும்.

தூரநோக்கு
சிறந்த விவசாயத்தின் மூலம் தேசிய நல்லதிஷ்டத்தை அடைதல்.


குறிக்கோள்
மேம்படுத்திய விவசாய தொழில்நுட்பத்தின்  அபிவிருத்தி, பரவச்செய்தலின் ஊடாக நிலபேறான விவசாய அபிவிருத்தியை அடைதல்.

பிரதானமான செயற்பாடுகள்
ஆராய்ச்சி
விரிவாக்கல்
விதை நடுகைப்பொருள் உற்பத்தி
ஒழுங்கமைப்ப சேவைகள்
பயிர் பாதுகாப்பு சட்டம்
மண் பாதுகாப்பு சட்டம்
கிருமிநாசினி கட்டுப்பாட்டு சட்டம்
விதைச் சட்டம்

 

Statistics

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 1865585

© 2006 Department of Agriculture, Sri Lanka (DOASL), All rights reserved-Developed in association with ICTA.